ஞாயிறு, 29 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Mahalakshmi
Last Updated : வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (12:55 IST)

ஜானி படத்தை மீண்டும் தயாரித்தால் நடிப்பேன் - நடிகர் ஜீவன் பேட்டி

ஜானி படத்தை மீண்டும் தயாரித்தால் நடிப்பேன் - நடிகர் ஜீவன் பேட்டி
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அதிபர் படத்தில் நடித்துள்ளார், ஜீவன். மாயி படத்தை இயக்கிய சூர்யபிரகாஷ் இயக்கம். அதிபர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் பழைய மார்க்கெட்டை பிடிக்க பல்வேறு திட்டங்கள் கைவசம் வைத்துள்ளார். அவை என்ன? அவரே சொல்கிறார்.
முதலில் அதிபர் படம் பற்றி சொல்லுங்கள்?
 
சூர்யபிரகாஷ் டைரக்ட் செய்திருக்கிற படம் அதிபர். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தயாராகியிருக்கிறது.
 
படத்தின் கதை?
 
வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு திரும்பி கட்டுமான தொழில் செய்ய முயற்சிக்கும் இளைஞனை ஒருவன் ஏமாற்றி சொத்துக்களைப் பறித்து ஜெயிலுக்கு அனுப்புவதும், பிறகு அதில் இருந்து அவன் மீண்டு திரும்பவும் வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறான் என்பதும் கதை.
 
படத்தின் நாயகி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்போர் பற்றி...?
 
நாயகியாக வித்யா நடித்திருக்கிறார். சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
ஹீரோவாக அறிமுகமான நீங்கள், அடுத்தப் படத்திலேயே வில்லனாக நடித்தீர்கள். இனி வில்லனாகும் ஐடியா இருக்கிறதா?
 
நான் காக்க காக்க, திருட்டு பயலே படங்களில் வில்லனாக நடித்திருக்கிறேன். ஆனால், இனிமேல் அப்படி வில்லன் வேடங்களில் நடிக்கப் போவதில்லை.
 
உங்களின் நான் அவன் இல்லை படம்தான், பழைய தமிழ்ப் படத்தை ரீமேக் செய்யும் கலாச்சாரத்துக்கு முன்னோடி. இனி அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் எந்தப் படத்தின் ரீமேக்கில் நடிப்பீர்கள்?
 
ரஜினிகாந்தின் ‘ஜானி’ படத்தை மீண்டும் தயாரித்தால் அதில் நடிக்க விரும்புகிறேன். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறேன். 
 
அதிபர் எப்போது திரையரங்குக்கு வருகிறார்?
 
இந்த மாத இறுதியில் அதிபர் திரைக்கு வருகிறது.