1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
  4. Did Alien cost so many crores in ayalaan movie

ஏலியனுக்கு இத்தனை கோடி செலவு ஆச்சா? தலையில் துண்டு போட்ட தயாரிப்பாளர்!

ayalaan
சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் ஏலியன் என்றும் சொல்லப்படுகிறது. 
 
இந்த படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. இந்த படம் பைனான்ஸ் பிரச்சனைகளில் சிக்கி ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கிறது. இப்போது 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இப்படத்தின் கடைசி கட்ட வேலைகளான விஎஃப் எக்ஸ் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் பேசுகையில், அயலான் படத்தில் 4,500 கிராபிக்ஸ் காட்சிகள் இருக்கிறது. ஏலியன் பொம்மையின் காட்சிகளை எடுக்க ரூபாய் .2 கோடி செலவு செய்துள்ளோம் என்றார். இதனால் கோலிவுட் போட்ட பணத்தை எடுப்பார்களா? என முணுமுணுத்து வருகிறது. 
 
About Writer
Papiksha Joseph
அடுத்த கட்டுரையில்
முன்பதிவில் கொட்டும் கோடிகள்... கிடுகிடுன்னு கல்லா கட்டும் பொன்னியின் செல்வன் 2!