மகன் சாந்தனுவின் திருமணத்தை முடித்த திருப்தியில் இருக்கிறார், நடிகர், இயக்குனர் பாக்யராஜ்.
ஒருகாலத்தில் ஓஹோவென்றிருந்த இறந்த காலத்தை எதிர்காலத்திலாவது மீட்டெடுக்கும் துடிப்புடன் நிகழ்காலத்தில் செயல்படும் அவர், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்தார்.
மகனின் திருமணத்தை முடித்துவிட்டீர்கள்...?
ஆமாம். திருமணத்துக்கு எல்லோரும் வந்திருந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
சாந்தனு இப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறார்?
இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
சாந்தனுவை வைத்து நீங்கள் படம் எடுக்கும் திட்டம் இருக்கிறதா?
சாந்தனுவுக்காக ஒரு கதை தயார் செய்து வைத்திருக்கிறேன். படப்பிடிப்பு சில மாதங்களில் தொடங்கிவிடும்.
எப்படிப்பட்ட கதை?
வழக்கமான குடும்ப கதைதான். சாந்தனுவுடன் மேலும் இரண்டு கதாநாயகர்கள் அதில் இருக்கிறார்கள்.
நடிகர் சங்க தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு?
நடிகர் சங்கத்தில் ஒரு சின்ன பிரச்சனை இருக்கிறது. அது என்ன என்று எனக்கு தெரியவில்லை. கண்டிப்பாக தேர்தலில் ஓட்டுப் போடுவேன். மத்தபடி...
மேலும் அடுத்தப் பக்கம் பார்க்க
நடிகர் சங்க தேர்தலில் நான் யாரையும் எதிர்க்கவில்லை. நடிகர் சங்க தேர்தலுக்குப் பிறகு இப்போதைய பிரச்சனை முடிந்துவிடும்.
சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதே?
சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்கப் போவதாக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது. சென்னையில் தற்போது உள்ள சிலை அகற்றப்பட்டு அந்த சிலை மணிமண்டபத்தில் வைக்கப்படும் என்று கூறியுள்ளனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது.
இப்போது வரும் படங்கள், சாதி சார்ச்சைக்கு இலக்காகின்றனவே?
சாதி, மதத்தை இழிவுபடுத்தாமல் டைரக்டர்கள் படம் எடுக்க வேண்டும். டைரக்டர்களுக்கு அதிக பொறுப்பு உணர்ச்சி உள்ளது.
அரசியல், சினிமா எதில் அதிக கவனம் செலுத்தப் போகிறீர்கள்?
நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவது இல்லை. இனிவரும் காலத்தில் முழுக்க முழுக்க சினிமாப் படங்கள் எடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்துவேன்.