செவ்வாய், 24 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Bala
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2016 (12:52 IST)

பேய்க்கெல்லாம் பயப்பட மாட்டேன் - அஞ்சலி பேட்டி

பேய்க்கெல்லாம் பயப்பட மாட்டேன் - அஞ்சலி பேட்டி
விமல், அஞ்சலி நடித்துள்ள மாப்ள சிங்கம் படத்தின் பிரஸ்மீட். முன்பு பார்த்ததைவிட சற்று மெலிந்த தோற்றத்தில் அஞ்சலி. தனது உடல் எடை முதல் நயன்தாராவுக்கு போட்டியா என்பதுவரை அஞ்சலி மனம் திறந்து பதிலளித்தார்.


மீண்டும் விமலுடன் இணைந்து நடித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீங்க?

விமல் என்னுடைய பெஸ்ட் ப்ரெண்ட். ரொம்பநாளா தெரியும். என்னை புரிந்து கொண்ட நல்ல ப்ரெண்ட். அதனால்தான் மூணாவது முறையா அவர்கூட சேர்ந்து நடிச்சிருக்கேன்.

விமலின் ஸ்பெஷாலிட்டி என்ன?

எந்த தொந்தரவும் தர மாட்டார். படப்பிடிப்பில் நல்ல ஒத்துழைப்பு தருவார்.

தெலுங்கில் நயன்தாரா அதிக சம்பளம் கேட்ட படத்தில் அவருக்குப் பதில் உங்களை ஒப்பந்தம் செய்ததாக ஒரு வதந்தி உலவுகிறதே?

என்னை நயன்தாராவுக்கு போட்டியாக புரொடியூசர்ஸ் உருவாக்குறாங்கன்னு பலரும் பேசுறாங்க. அதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. போட்டி இருக்கிறது நல்லதுதானே.

தமிழில் நீண்ட இடைவெளி எடுத்துக் கொள்வது போலிருக்கிறதே?

அப்படியெல்லாம் இல்லை. நிறைய படங்களில் கேட்கிறார்கள். எனக்கு பொருத்தமான, கதையம்சம் உள்ள படங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கிறேன்.

உங்கள் எடையும் சர்ச்சைக்குள்ளாகியிருப்பது தெரியுமா?

சில படங்களில் நான் குண்டாக தெரிவதாக ப்ரெண்ட்ஸ் சொல்லியிருக்கிறார்கள். எடையை குறைக்க முயற்சி செய்துட்டு வர்றேன். இதுவரை 6 கிலோ எடை குறைச்சிருக்கேன். இன்னும் குறைக்க வேண்டும்.

பேய் படங்களில் நடிப்பது எப்படியுள்ளது?

தெலுங்கில் கீதாஞ்சலி என்ற பேய் படத்தில் நடித்தேன். அது புது அனுபவம். நிஜ வாழ்க்கையில் நான் பேய்க்கு பயப்படுகிறவள் கிடையாது.

இப்போது நடித்துவரும் படங்கள்...?

தமிழில் இறைவி, பேரன்பு, தரமணி, காண்பது பொய்னு 4 படங்களில் நடிக்கிறேன். எதுவும் பேய் படம் கிடையாது. காண்பது பொய்கூட பேய் படம் இல்லை, திகில் படம்தான்.