திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By papiskha
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (19:05 IST)

இயக்குனராக அவதரமெடுத்த விஜய் பட நடிகை - ஆதரவு கொடுக்குமா தமிழ் சினிமா?

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவில் நுழைந்த நடிகை காவேரி கல்யாணி விஜய் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். பின்னர் புது நடிகைகளின் வரவுகளால் சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் ஒதுங்கியிருந்த அவர் தற்போது இயக்குனராக புது அவதாரம் எடுத்துள்ளார்.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும், தனது இந்த புது முயற்சி குறித்து பேசிய காவேரி கல்யாணி, "இதுவரை எனக்கு அன்பும் பேராதரவும் அளித்து கொண்டிருக்கிற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள், சக நடிக-நடிகையர், ஊடக நண்பர்கள், மக்கள் தொடர்பாளர்கள், நலம் விரும்பிகள் ஆகிய அனைவருக்கும், இத்தருணத்தில் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


‘K2K புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில், ஒரு இயக்குனர்-தயாரிப்பாளராக நான் அடியெடுத்துவைக்கும் இந்த புதிய முயற்சிக்கும் உங்களது அன்பும் ஆதரவும் நல்குமாறு வேண்டுகிறேன். ‘K2K புரொடக்ஷன்ஸ்’ சார்பாக எங்களது முதல் தயாரிப்பாக, தமிழ்-தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், உண்மை நிகழ்வுகளைக் அடிப்படையாகக் கொண்ட ஒரு தனித்துவமான காதல் கதையை, உளவியல் திரில்லர் திரைப்படமாக உருவாக்கியிருக்கிறோம். இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசரை முன்னணி திரைப்பட இயக்குனர் திரு. கெளதம் வாசுதேவ் மேனன், ஹோலி பண்டிகை நாளான இன்று வெளியிட்டுள்ளார் என்பதை தெரிவித்து மகிழ்கிறோம். மிக்க நன்றி என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும் என கூறியுள்ளார்.