என்னை படுக்கைக்கு அழைந்த அந்த நடிகர் - நடிகை கஸ்தூரி பகீர் பேட்டி


Murugan| Last Modified திங்கள், 13 மார்ச் 2017 (08:54 IST)
தமிழ் சினிமா உலகில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நடிகை கஸ்தூரி ஒரு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டி அளித்தார்.

 

 
நடிகை கஸ்தூரி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர். அதன் பின் அவர் ஒரு மருத்துவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது சொந்த விவகாரம் காரணமாக சென்னை வந்த அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
 
பொதுவாக, கதாநாயகிகள் தங்களை அட்ஜெஸ்ட் செய்து போக வேண்டும் என சில நடிகர்கள் ஆசைப்படுவார்கள். அப்படி நடக்கவில்லை எனில், அந்த நடிகைகளிடமிருந்து பட வாய்ப்புகளை பறித்து விடுவார்கள். எனக்கும் அப்படி ஏற்பட்டுள்ளது. தற்போது அரசியல்வாதியாக இருக்கும் ஒரு நடிகரோடு, நான் ஒரு படத்தில் நடித்தேன். அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். ஆனால், நான் முடியாது என மறுத்துவிட்டேன். உடனே அவருக்கு ஈகோ பிரச்சனை வந்துவிட்டது. எனவே, படப்பிடிப்பு நேரங்களில் என்னை சீண்டிக் கொண்டே இருந்தார். மேலும், 2 படங்களில் இருந்து எனது வாய்ப்பை பறித்தார்.
 
பட வாய்ப்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது நடந்து கொண்டிருக்கிறது. இது உண்மைதான்” என கஸ்தூரி கூறினார்.


இதில் மேலும் படிக்கவும் :