இந்திய மீனவர்களை கைது செய்வது இதனால் தான்! - இலங்கை பிரதமர் அதிரடி கருத்து


லெனின் அகத்தியநாடன்| Last Modified புதன், 5 அக்டோபர் 2016 (17:12 IST)
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போதுதான் கைது செய்ய வேண்டியுள்ளது என்று இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
 
 
இந்திய மீன்வர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் குறிப்பாக புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வர மீனவர்கள், இலங்கை கடலோர காவல்துறையினரால் அடிக்கடி கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுமாக உள்ளனர்.
 
நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் இந்த பிரச்சனை இரு நாட்டு அரசுகளும் நிரந்தர தீர்வு காணும் என மீனவர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
 
இந்நிலையில், இந்தியாவுக்கு 3 நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே நேற்று செவ்வாய்கிழமை [04-10-16] வருகை புரிந்தார். இன்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி, ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரணில் விக்ரமசிங்கே, ”இந்தியா-இலங்கை மீனவர் பிரச்சினைகளை தீர்க்க, இரு நாட்டு மீனவர் அமைப்புகளும் இணைந்து பேச்சு வார்த்தை நடத்துவது அவசியம். இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போதுதான் கைது நடவடிக்கை எடுக்க வேண்டி வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :