1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (14:45 IST)

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்.. உறுதி செய்த மனைவி..!

ஜிம்பாவே கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானதை அவருடைய மனைவி உறுதி செய்துள்ளார். மறைந்த ஹீட் ஸ்ட்ரீட் வயது 49.
 
கடந்த 1993ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஜிம்பாவே அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஹீத் ஸ்ட்ரீக் விளையாடினார். அந்த அணியின் கேப்டனாகவும், பயிற்சியாளராகவும் பணியாற்றியவர் ஹீத் ஸ்ட்ரீக்
 
 டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக இருந்த நிலையில் கடந்த  மே மாதம் அவருக்கு கல்லீரல் புற்றுநோய்  தாக்கியது.
 
இதனை அடுத்து அவர் கடந்து சில நாட்களுக்கு முன் உயிரிழந்து விட்டதாக வதந்தி கிளம்பியது. இதனை அவருடைய மனைவி மறுத்திருந்த நிலையில் தற்போது  இன்று அவர் காலமானதாக அவருடைய மனைவி தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.  
 
ஹீத் ஸ்ட்ரீக் மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva