வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By

எனக்கு எப்பவுமே நீ சீக்கூதான் – கோலிக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் கோலிக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கும் யுவ்ராஜ் சிங்குக்கும் நெருக்கமான நட்பு உண்டு. அவர் அணியில் இடம் கிடைக்காமல் இருந்த போது கேப்டனாதும் முதல் தொடரிலேயே வாய்ப்புக் கொடுக்க சதமடித்துக் கலக்கினார் யுவ்ராஜ். அதுபோல தான் தலமையேற்ற ஆர் சி பி அணியிலும் யுவ்ராஜை ஏலத்தில் எடுக்க கூறியிருந்தார் கோலி. இந்நிலையில் இப்போது கோலி கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனது கிரிக்கெட் வாழ்க்கையின் மோசமான பார்மில் இருக்கும் நிலையில் அவருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் யுவ்ராஜ் சிங்.

அந்த கடிதத்தில் ‘எப்படி இருக்கிறீர்களோ, அப்படியே இருங்கள. இதுவரை எப்படி விளையாடினீர்களோ அப்படியே விளையாடி நாட்டைப் பெருமைப் படுத்துங்கள். விராட், நீ ஒரு கிரிக்கெட் வீரரானகவும், கேப்டனாகவும் வளர்வதைப் பாத்திருக்கிறேன். உங்கள் கிரிக்கெட் வாழ்வில் ஏற்கனவே நிறைய சாதித்திருக்கிறீர்கள். உங்களின் புகழ்பெற்ற ரன் சேஸ்களில் இன்னும் பலவற்றை எதிர்பார்க்கிறேன். நீ எனக்கு என்றுமே சீக்கூதான் (கோலியின் செல்லப் பெயர்).’ என்று உருக்கமாக அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.