1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 29 ஜூன் 2017 (22:45 IST)

மகளிர் உலகக்கோப்பை: மேற்கிந்திய தீவுகள் அணியை புரட்டி எடுத்த இந்திய அணி

மகளிர் உலகக்கோப்பையின் இன்றைய ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி புரட்டி எடுத்து 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.



 
 
இன்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணியின் மகளிர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இதனால் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி தனது பேட்டிங்கை தொடங்கியது.
 
தொடக்க ஆட்டக்காரர் ராட் முதல் ஓவரிலேயே அவுட் ஆனாலும் அவருடன் களமிரங்கிய மந்தனா அதிரடியாக விளையாடி 106 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார். இறுதியில் 42.3 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.