வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 17 ஜூலை 2023 (09:07 IST)

விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் ஆனார் அல்கராஸ்.. ‘மாஸ்டர்’ விஜய் ஸ்டைலில் போஸ்..!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் சாம்பியன் பட்டத்தை அல்கராஸ் வென்று சாதனை படைத்துள்ளார்.
 
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் இறுதி போட்டி நேற்று நடந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிசை வீழ்த்தி ஸ்பெயின் நாட்டு வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் ஆனார். இதனையடுத்து உலகெங்கிலும் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
முதல் முறையாக விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அல்கராஸ் முத்தமிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
மேலும் நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' பட லுக்கில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அல்கராசின் புகைப்படத்தை விம்பிள்டன் நிர்வாகம் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
 
 
Edited by Siva