1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 8 அக்டோபர் 2021 (12:27 IST)

ஆர் சி பி இரண்டாம் இடத்துக்கு செல்ல இரண்டு வாய்ப்புகள்… நடக்குமா?

இந்த முறை ப்ளே ஆஃப்க்கு சென்றுள்ள ஆர் சி பி அணி எப்படியும் கோப்பையை கைப்பற்ற வேண்டுமென்ற தீவிரத்தோடு விளையாடி வருகிறது.

இந்நிலையில் இப்போது மூன்றாவது இடத்தில் இருக்கும் ஆர் சி பி இரண்டாம் இடத்துக்கு சென்றால் அதன் கோப்பை வெல்லும் வெற்றி வாய்ப்பு அதிகம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் ஆர் சி பி கடைசி போட்டியில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது.

இதில் ஆர் சி பி அணி முதலில் பேட் செய்தால் சுமார் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ரன்ரேட் அதிகமாகி சென்னையை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்துக்கு செல்ல முடியும். அதே போல முதலில் பந்து வீசினால் 142 ரன்களுக்கு மேல் கொடுக்காமல் அதை 16 ஓவர்களில் துரத்தி வெல்ல வேண்டும்.