வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 6 மே 2019 (11:11 IST)

விக்கெட் இழப்பின்றி 365 ரன்கள் – வெஸ்ட் இண்டீஸ் ஜோடி உலகசாதனை !

அயர்லாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜான் கேம்ப்பெல் மற்றும் ஷாய் ஹோப்  ஆகியோர் 365 ரன்கள் எடுத்து சாதனைப் புரிந்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், அயர்லாந்து ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.  முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்-அயர்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜான் கேம்ப்பெல் மற்றும் ஷாய் ஹோப் ஆகியோர் உலகசாதனை புரிந்துள்ளனர்.

இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 365 ரன்கள் சேர்த்து அதிக ரன்கள் சேர்த்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளனர். கடந்த ஆண்டு பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக், பஹார் ஜமான் ஜோடி ஜிம்பாப்வேக்கு எதிராக தொடக்க விக்கெட்டுக்கு 304 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கடந்த உலகக்கோப்பையில் வெஸ் இண்டிஸின் கெய்ல் மற்றும் சாமுவேல் ஆகியோர் இரண்டாவது விக்கெட்டுக்கு சேர்த்த 372 ரன்கள் அதிகபட்ச பாட்னர்ஷிப்பாக உள்ளது.

ஜான் கேம்ப்பெல் 179 ரன்களும் ஷாய் ஹோப் 170 ரன்களும் சேர்த்து அவுட் ஆகினர்.  இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 196 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.