செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 18 நவம்பர் 2020 (17:20 IST)

விராட் கோலி இரண்டு வீரர்களுக்கு சமமானவர் – மெக்ராத் பாராட்டு!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இரண்டு வீரர்களுக்கு சமமானவர் என க்ளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதில் ஒருநாள் மற்றும் டி 20 அணிகளில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை. அதே போல டெஸ்ட் தொடரில் கடைசி மூன்று போட்டிகளில் கேப்டன் கோலி இடம்பெறவில்லை. இது இந்திய அணிக்கு மட்டும் இல்லாமல் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களுக்கே மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இந்நிலையில் கோலி இல்லாத 3 டெஸ்ட் போட்டிகளும் மிகப்பெரிய இழப்பை இந்திய அணி சந்திக்க வேண்டியிருக்கும் என கருத்துகள் எழுந்துள்ளன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் க்ளென் மெக்ராத் ‘விராட் கோலி இரண்டு வீரர்களுக்கு நிகரானவர். அவர் இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும். புஜாரா, ரகானே, போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர். ஆனாலும் வீராட் கோலி அளவுக்கு பலம் வாய்ந்து இருக்க முடியாது’ எனக் கூறியுள்ளார்.