திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (17:38 IST)

10 வருடங்களாகியும் தகர்க்கப்படாத யுவராஜ் சிங் சாதனை!!

பத்து வருடங்கள் ஆகியும் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை மற்ற எந்த கிரிக்கெட் வீரரும் தகர்க்கவில்லை என வைரலாக செய்தி பரவி வருகிறது.


 
 
ஆம், கடந்த 2007 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங் ஒரு ஓவரில் வீசப்பட்ட 6 பந்துகளையும் சிக்கஸருக்கு விரட்டினார்.
 
இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற இந்த போட்டியில், இங்கிலாந்த் எதிரணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

போட்டியின் போது மைதானத்தில் யுவராஜுடன் தோனி பேட்டிங் செய்துக்கொண்டிருந்தார். அப்போது இங்கிலாந்த் வீரர் பிளிண்டாப் ஏதோ திட்டினார்.
 
இதனால், கடுப்பான யுவராஜ் அவர் மீது உள்ள கோபத்தில் பந்துகளை சிக்ஸருக்கு தெறிக்கவிட்டார். இந்த நிகழ்வின் வீடியோ உங்களுக்காக...