புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 22 பிப்ரவரி 2021 (21:01 IST)

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியில் இணைந்தார் உமேஷ் யாதவ்:

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே சென்னையில் ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தது என்பது தெரிந்ததே
 
முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் 2வது டெஸ்ட் போட்டியில் பதிலடியாக இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் வரும் 24ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனை அடுத்து நான்காவது டெஸ்ட் போட்டி அதே மைதானத்தில் மார்ச் 4ஆம் தேதி தொடங்க உள்ளது 
 
இந்த போட்டிக்கான இந்திய அணியில் உமேஷ் யாதவ் இணைந்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த உமேஷ் யாதவ் தற்போது காயத்தில் இருந்து முற்றிலும் குணமாகி விட்டதால் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட உள்ளார்