1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 31 டிசம்பர் 2021 (10:49 IST)

ஆஸ்திரேலிய வீரருக்கு கொரோனா உறுதி… அதிர்ச்சி தகவல்!

ஆஸ்திரேலிய அணி இப்போது ஆஷஸ் தொடரில் விளையாடி வரும் நிலையில் அந்த அணியின் வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை சிறப்பாக விளையாடி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. விரைவில் நான்காவது டெஸ்ட் போட்டி நடக்க உள்ள நிலையில் அந்த அணியின் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அணி வீரர்களுக்கு வழக்கமாக செய்யும் சோதனைகளின் போது ஹெட் கொரோனா பாதிப்புக்குள்ளானது தெரியவந்துள்ளது. ஹெட் முதல் டெஸ்ட் போட்டியில் அதிரடியாக விளையாடி 152 ரன்கள் சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.