1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (19:44 IST)

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு: 2வது ஓவரிலேயே விக்கெட்டை இழந்த மும்பை!

டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சு: 2வது ஓவரிலேயே விக்கெட்டை இழந்த மும்பை!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 5வது போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தததை அடுத்து மும்பை அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது 
 
ஏற்கனவே மும்பை அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கியுள்ளது. அதேபோல் கொல்கத்தா அணியும் கொல்கத்தா அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து இன்றைய போட்டியிலும் வெற்றியை தக்கவைத்துக் கொள்ள தீவிரமாக இருக்கும். இதனால் இந்த போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் இரு அணிகளும் விளையாடும் வீரர்களின் பெயர்கள் பின்வருமாறு:
 
மும்பை: ரோஹித் சர்மா, டீகாக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, ராகுல் சஹார், மேக்ரோ ஜேன்சென், டிரெண்ட் போல்ட், பும்ரா
 
கொல்கத்தா அணி: கில், ரானா, ராகுல் திரிபாதி, ஆண்ட்ரே ரஸல், மோர்கன், தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், கம்மின்ஸ், ப்ரசித் கிருஷ்ணா, ஹர்பஜன் சிங், வருண் சக்கரவர்த்தி