1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (11:17 IST)

இந்திய அணிக்கு இன்று 1000-ஆவது ஒருநாள் போட்டி: மே.இ.தீவுகளுடன் மோதல்!

இந்திய அணிக்கு இன்று 1000-ஆவது ஒருநாள் போட்டி: மே.இ.தீவுகளுடன் மோதல்!
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது
 
இந்த போட்டி இந்தியாவுக்கு ஆயிரமாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்பது சிறப்புக்குரிய ஒரு விஷயமாகும்
 
இந்திய கிரிக்கெட் அணி இன்று 1000 ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளதை அடுத்து இந்திய அணிக்கு அரசியல் பிரபலங்கள் கிரிக்கெட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
அகமதாபாத்தில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது என்பது 1000 ஆவது போட்டியில் இந்தியா வென்று சாதனை படைக்குமா என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்