ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (22:12 IST)

விஜய் ஹசாரே கோப்பை: இறுதிப்போட்டிக்கு தமிழக அணி தகுதி

கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு கர்நாடகா மற்றும் தமிழக அணிகள் தகுதி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப்போட்டி நாளை மறுநாள் நடைபெறவுள்ளது
 
முன்னதாக இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் கர்நாடகா மற்றும் சட்டீஸ்கர் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சட்டீஸ்கர் அணி 223 ரன்கள் எடுத்த நிலையில் கர்நாடகா அணி 229 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது
 
அதேபோல் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் தமிழகம் மற்றும் குஜராத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்து 177 ரன்கள் எடுத்த நிலையில் தமிழக அணி 181 ரன்கள் எடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இன்றைய போட்டியில் தமிழக அணியின் ஷாருக்கான் 56 ரன்களும், கேப்டன் கார்த்திக் 47 ரன்களும், முகுந்த் 32 ரன்களும் எடுத்தனர்.