1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2021 (08:45 IST)

சதத்தை மிஸ் செய்த ரிஷப் பண்ட்: இலக்கை நெருங்கியது இந்திய அணி!

சதத்தை மிஸ் செய்த ரிஷப் பண்ட்: இலக்கை நெருங்கியது இந்திய அணி!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது சிட்னியில் நடைபெற்ற நடைபெற்று வரும் மூன்றாவது கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது தெரிந்ததே
 
அதே போல் இந்திய அணி முதல் இன்னிங்சில் 244 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது 407 ரன்கள் இலக்கு என்று நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது இந்திய அணி முதலில் இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் நிலையில் ரோகித் சர்மா அபாரமாக விளையாடிய 52 ரன்களும் புஜாரே 70 ரன்களும் ரிஷப் பண்ட் 97 ரன்களும் எடுத்தனர். ரிஷப் பண்ட் நூலிழையில் சதத்தை தவறவிட்டார்
 
இதனையடுத்து சற்று முன் வரை இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்து உள்ளது என்பதும் வெற்றி பெற இன்னும் 145 ரன்களை உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் ரவீந்திர ஜடேஜா அஸ்வின் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில் இந்திய அணி இன்றுக்குள் 145 ரன்கள் எடுத்து வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்