1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By mahendran
Last Modified: செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (11:06 IST)

இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே சண்டையை மூட்டியது பிரிட்டிஷ்தான் – மோகன் பகவத் பேச்சு!

இந்தியாவில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே பகையுணர்வை தூண்டியது பிரிட்டிஷார்தான் என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் பேசியுள்ளார்.

புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ஒவ்வொரு இந்தியனும் இந்துதான் எனக் கூறியுள்ளார். அவரது பேச்சில் ‘இந்து என்பது இனம் மதம் சம்மந்தப்பட்ட சொல் அல்ல. அது அனைத்து மக்களின் வாழ்க்கையை வளமாக்கும் பாரம்பரிய பெயர் ஆகும். ஆக்கிரமிப்பாளர்கள் மூலமாகவே இஸ்லாம் வந்தது.  இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதலைத் தூண்டியது பிரிட்டிஷார்தான்.

இந்துக்களுடன் வாழ்வதால் உங்களுக்கு ஒன்றும் கிடைக்காது என இஸ்லாமியர்களிடம் பேசி தனி நாடு கோர தூண்டினர். அதுபோல இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என இந்துக்களிடம் கூறி இரு தரப்புக்கிடையே மோதலை ஏற்படுத்தினர்.  இது தொடர்பாக நாம் பார்வைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.