4 விக்கெட்டுக்களை இழந்து திணறும் இலங்கை: இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி வாய்ப்பா?
இந்தியா மற்றும் இலங்கை இடையே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மொகாலியில் நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
முன்னதாக இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகள் இழந்து 574 ரன் எடுத்த போது டிக்ளேர் செய்தது .மிக அபாரமாக விளையாடிய ஜடேஜா 175 ரன்கள் எடுத்தார் என்பது ரிஷப் பண்ட் 96 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இலங்கை அணி தற்போது தனது முதல் இன்னிங்சை விளையாடி வரும் நிலையில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
இந்திய அணியின் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்கள். இன்னும் 466 ரன்கள் பின்தங்கி உள்ள இலங்கை இன்னிங்ஸ் தோல்வி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது