303 ரன்கள் இலக்கு, 3 விக்கெட் இழப்பு! வெற்றி பெறுமா இலங்கை

Last Modified வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (20:44 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி வருகிறது இன்றைய ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இலங்கைக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
ஸ்கோர் விபரம்:

தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸ்: 235/10

இலங்கை முதல் இன்னிங்ஸ்: 191/10

தென்னாப்பிரிக்கா 2வது இன்னிங்ஸ்: 259/10

இலங்கை 2வது இன்னிங்ஸ்: 83/3
இன்றைய மூன்றாவது நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா கேப்டன் டீபிளஸ்சிஸ் 90 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். டீகாக் 55 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் அம்புல்டனியா 5 விக்கெட்டுக்களையும், ஃபெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், ரஜிதா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்

இலங்கை அணி தனது 2வது இன்னிங்ஸில் கருணரத்னே, திமிரன்னே, மெண்டிஸ் ஆகியோர்களின் விக்கெட்டுக்களை இழந்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :