புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2019 (11:06 IST)

ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
2013ஆம் ஆண்டு நடைபெற்ற 6ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் நடைபெற்றதை டெல்லி காவல் துறையினர் கண்டுபிடித்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜீத் சாண்டிலியா, அங்கீத் சவான் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
 
குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் ஆயுள்கால தடை விதித்து கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்தது. இது சம்மந்தான விசாரித்து வந்த கேரள உயர்நீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி உத்தவவிட்டது. இதனை எதிர்த்து பிசிசிஐ உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
 
இந்நிலையில் இன்று இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீசாந்த் போட்டிகளில் விளையாடுவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் எனவும் கூறியுள்ளது.
 
மேலும் ஸ்ரீசாந்த் போட்டியில் விளையாடுவது குறித்து அளித்துள்ள மனுவிற்கு பிசிசிஐ மூன்று மாதத்திற்குள் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.