சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமைக்குரிய பதவி
மகளிர் உலகக் கோப்பை போட்டியை விளம்பரம் செய்ய நடிகர் சிவகார்த்திகேயனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் அணுகி உள்ளதாக வெளிவந்துள்ள தகவல் சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா வரும் 21ம் தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் தொடங்கவுள்ளது. இந்த தொடரை விளம்பரம் செய்ய ஆஸ்திரேலிய தூதரகம் முடிவு செய்து அதற்காக பெண்கள் கிரிக்கெட் போட்டி கதை குறித்த திரைப்படத்தை தயாரித்து நடித்த சிவகார்த்திகேயனை அணுகியது. இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தைக்கு பின் தற்போது சிவகார்த்திகேயன் இந்த போட்டியின் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில் ’கனா’ என்ற படத்தை தயாரித்ததால் அந்த படத்தை பார்த்து ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விளம்பரம் செய்ய என்னை அணுகியுள்ளனர். நாம் அனைவரும் இந்த போட்டிக்கு ஆதரவு தரவேண்டும். நமது அணியை மட்டுமல்லாது அனைத்து வீராங்கனைகளுக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற எனது வாழ்த்துக்கள் என்று சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்
‘கனா’ என்ற திரைப்படத்தை தயாரித்த சிவகார்த்திகேயனுக்கு பெருமைக்குரிய பதவி கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.