திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (17:54 IST)

ஸ்கோர் கேட்ட ரசிகர்கள்… நறுக் பதில் சொல்லி வாயடைத்த சிராஜ்!

லீட்ஸில் நடந்து வரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளது.

லார்ட்ஸ் வெற்றி மகிழ்ச்சியுடன் லீட்ஸில் நடக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கியது. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக இங்கிலாந்து பந்துவீச்சில் 78 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தது. இந்நிலையில் அதன் பின்னர் பந்துவீச சென்ற போது இங்கிலாந்து ரசிகர்கள் இந்திய வீரர்களை சீண்ட ஆரம்பித்துள்ளனர்.

எல்லையோரத்தில் பீல்ட் செய்த சிராஜிடம் வம்பிழுக்கும் விதமாக ஸ்கோர் என்ன எனக் கேட்டு கிண்டல் செய்துள்ளனர். அவர்களின் நச்சரிப்புக்கு பதிலளிக்கும் விதமாக சிராஜ் 1-0 என்று சீரிஸில் தாங்கள் முன்னிலை வகிப்பதை சொல்லி அவர்களின் வாயை அடைத்துள்ளார்.