திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 ஆகஸ்ட் 2021 (17:21 IST)

குரங்கு பொம்மை இயக்குனரோடு இணைந்த விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி கைவசம் இப்போது 10 படங்களுக்கும் மேல் உள்ளது. ஆனாலும் தொடர்ந்து படங்களில் ஒப்பந்தம் செய்து வருகிறார்.

குரங்கு பொம்மை படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குனர் நித்திலன். இதையடுத்து அவர் ஆர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க ஆயத்தமானார். ஆனால் அது நிறைவேறாத நிலையில் அடுத்து விஜய் ஆண்டனிக்கு கதை சொல்லி சம்மதம் வாங்கினார். ஆனால் அதுவும் நிறைவேறாமல் இப்போது விஜய் சேதுபதியை வைத்து அந்த கதையை இயக்க உள்ளாராம்.

இந்த படத்தை விஜய் சேதுபதியை வைத்து அனபெல் சேதுபதி படத்தை தயாரித்த தயாரிப்பாளரே தயாரிக்க உள்ளாராம்.