1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By bala
Last Modified: வியாழன், 19 அக்டோபர் 2017 (11:01 IST)

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து தோல்வி

டென்மார்க்கின் ஓடென்ஸ் நகரில் நடைபெற்று வரும் டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனையான பி.வி.சிந்து, தோல்வி அடைந்தார்.




பி.வி.சிந்து, முதல் சுற்றில் சீன வீராங்கனை சென் யூபெய்யை எதிர்கொண்டார். துவக்கத்தில் 3-0 என ஆரம்பத்தில் பி.வி.சிந்து முன்னிலை பெற்றார். ஆனால் அதன் பின் சீன வீராங்கனை கை ஓங்கியது. இருப்பினும் சிந்து தீவிரமாகப் போராடி புள்ளிகள் பெற்று, 9-9, 17-17 என சமன்செய்தார்.

2-வது செட்டைப் பொருத்தவரையில் துவக்கத்தில் இருந்தே சீன வீராங்கனை சென் ஆதிக்கம் செலுத்தினார். இடைவேளைக்குப் பிறகு சென் 15-11 என வெற்றியை தனதாக்கிக் கொண்டார். ஆனாலும் விடாமல் துரத்திய சிந்துவும் புள்ளிகள் பெற்று இடைவெளியைக் குறைக்க, 20-20 என சமநிலையில் இருந்தது. ஆனால், இறுதியில் சென் 23-21 என ஆட்டத்தை முடித்து 2-ம் செட்டை கைப்பற்றினார்.