புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 13 அக்டோபர் 2016 (17:58 IST)

நடிகை ஸ்ரேயாவுடன் ஊர் சுற்றும் வெய்ன் பிராவோ

பிரபல தென்னிந்திய நடிகை ஸ்ரேயாவுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி வீரர் பிராவோ மும்பை நட்சத்திர விடுதியில் மதிய உணவு அருந்தியுள்ளார்.
 

 
சில வருடங்களுக்கு முன்புவரை, தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. கடந்த வருடன்        ஹிந்தியில் வெளியான த்ரிஷ்யம் படம்தான் திரைக்கு வந்த திரைப்படம் ஆகும். அதன் பின்னர், நாகார்ஜுனா, கார்த்திக் நடித்து வெளியான ‘தோழா’ திரைப்படத்தில் சில காட்சிகளில் தோன்றினார்.
 
அவருக்கு வயதாக விட்டதாலும், புதுமுக நடிகைகளின் வரவாலும் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம் தனது அதிரடி ஆட்டத்தாலும், நடனத்தாலும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர் வெய்ன் பிராவோ.

 
இந்நிலையில், இருவரும் மும்பையில் உள்ள தனியார் விடுதியில் மதிய உணவு அருந்தியுள்ளனர். பின்னர், அங்கிருந்து வெளியேறி இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றுள்ளனர்.
 

 
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் இருவரும் ஒரே நிற உடையணிந்து வந்திருந்தனர். ஸ்ரேயா கருப்பு நிற ஜம்புசூட் [Jumpsuit] உடையுடன் கண்ணாடியும் அணிந்திருந்தார். பிராவோ ஊதா நிற ஜூன்ஸும், கருப்பு நிற சட்டையும், கண்ணாடியும் அணிந்திருந்தார்.
 
இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.