செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (17:41 IST)

ஓவரின் 6 பந்துகளிலும் பவுண்டரி… ஆனாலும் மோசமான சாதனையில் இருந்து தப்பிய ஷிவம் மவி!

நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஷிவம் மவியின் முதல் ஓவரின் எல்லா பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் பிருத்வி ஷா.

நேற்று நடந்த டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் முதல் ஓவரை கொல்கத்தாவின் ஷிவம் மவி வீச அந்த ஓவரின் அனைத்து பந்துகளிலும் பவுண்டரிகளை பறக்க விட்டார் பிருத்வி ஷா. அந்த ஓவரில் மவி வீசிய ஒரு வொய்ட் பந்தையும் சேர்த்து மொத்தம் 25 ரன்கள் சேர்க்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்த சீசனில் குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட அரைசதத்தையும் பதிவு செய்தார் பிருத்வி ஷா.

ஆனாலும் ஒரு மோசமான சாதனையில் இருந்து தப்பியுள்ளார் ஷிவம் மவி. ஐபிஎல் வரலாற்றில் முதல் ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த வீரர்கள் பட்டியலில் அபு நெச்சிம் (27 ரன்கள்) முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து ஹர்பஜன் 26 ரன்களோடு இரண்டாம் இடத்தில் இருக்க, ஷிவம் மவி 3 ஆவது இடத்தில் உள்ளார்.