புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 ஜூன் 2021 (12:33 IST)

ஷாகித் அப்ரிடியின் கனவு அணியில் இவர்தான் கேப்டனா? சிரிப்பு வருது ஏட்டய்யா மொமண்ட்!

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தனது ஆல்டைம் பேவரைட் வீரர்கள் கொண்ட கணவு அணியை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகீத் அப்ரிடி எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் வைக்காதவர். தனது வயதை மாற்றிக் குறிப்பிட்டு சர்வதேசப் போட்டிகளில் விளையாடியதாக சர்ச்சையில் சிக்கினார். அதுபோல பல கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து வாக்குவாதங்கள் செய்து வருபவர்.

இப்போது தனது ஆல்டைம் பேவரைட் கனவு அணியை வெளியிட்டுள்ள அவர் அதற்கு இன்சமாம் உல் ஹக்கை கேப்டனாக நியமித்துள்ளார். ஆனால் அந்த அணியில் இரண்டு முறை உலகக்கோப்பை தொடரை வென்ற ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை வெறும் வீரராக மட்டும் சேர்த்துள்ளார். எந்த அடிப்படையில் இன்சமாம் உல் ஹக் சிறந்த கேப்டன் என பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதே போல சச்சின் டெண்டுல்கரை நான்காவது வீரராக நியமித்துள்ளார்.

அப்ரிடியின் கனவு அணி:-

சயீத் அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பாண்டிங், சச்சின் டெண்டுல்கர், இன்சமாம் உல் ஹக், ஜாக் காலிஸ், ரஷீத் லடீப், வாசிம் அக்ரம், கிளென் மெக்ரா, ஷேன் வார்ன், ஷோயப் அக்தர்.