புதன், 12 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 14 செப்டம்பர் 2016 (16:24 IST)

நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்: சேவாக் பாராட்டு மழை

பாரா ஒலிம்பிக்கில் தீபா மாலிக் வெள்ளி பதக்கம் வென்றார். அதற்கு சேவாக் அவரை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.


 

 
தீபா மாலிக்(45) இந்தியா சார்பில் ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டு எரிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இவருக்கு இந்தியா சார்பில் பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
 
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்றாலும் அதிரடியில் குறையாமல் வேகத்தோடு தான் இருக்கிறார். தற்போது டுவிட்டரில் அதிரடியான கருத்துகளை பதிவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
 
சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் கூறியதாவது:- 
 
உங்களை போல உத்வேகம் உடையவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலம் நாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பதை நினைவூட்டியதற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.