உண்மையிலேயே சேவாக் கெத்துதான்: குவியும் பாராட்டுக்கள்...

Last Updated: சனி, 16 பிப்ரவரி 2019 (19:38 IST)
நேற்று முன் தினம் காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பகுதியில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது திடீரென எதிரே வந்த பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளுடன் வந்த கார் மோதியது. 
 
இந்த தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 44 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலால் நாடே அதிர்ச்சி அடைந்து பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.
 
இந்நிலையில், பலர் வீர மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். அந்த வகையில் இந்திய மூன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் செய்துள்ள காரியம் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. 
சேவாக், தனது டிவிட்டரில் குறிப்பிட்டிருப்பதாவது; வீரமரணம் அடைந்த இந்த வீரர்களுக்கு நாம் எது செய்தாலும் அது போதுமானதாக இருக்காது. ஆனால், என்னால் முடிந்தவரைக் குறைந்தபட்சமாக வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் முழுமையான கல்விச் செலவு அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். என்னுடைய சேவாக் சர்வதேச பள்ளியில் படிக்க வைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
 
சேவாக் ஹரியானாவில் உள்ள ஹஜ்ஜாரில் சர்வதேச பள்ளிக்கூடம், பயிற்சிப்பள்ளி உள்ளிட்டவற்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சேவாக்கின் இந்த் அறிவிப்பை கண்ட பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :