திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 6 செப்டம்பர் 2021 (16:45 IST)

லார்ட் ஷர்துல்… ஆசிரியர் தின பரிசு எனப் புகழ்ந்த சேவாக்!

ஓவல் டெஸ்ட்டின் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து கலக்கியுள்ளார் இந்திய அணியின் ஷர்துல் தாக்கூர்.

நடைபெற்று வரும் ஓவல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பின் வரிசை பேட்டிங்கை இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதமடித்துக் காப்பாற்றியவர் ஷர்துல் தாக்கூர். அதே போல பவுலிங்கிலும் திருப்புமுனையாக சில விக்கெட்களைக் கைப்பற்றி தன்னை ஒரு ஆல்ரவுண்டராக நிருபித்து வருகிறார்.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் தாக்கூரின் பேட்டிங்கைக் குறிப்பிட்ட சேவாக் ‘பின் வரிசையில் எப்படி ஆடவேண்டுமோ அப்படியான பேட்டிங். ஆசிரியர் தினத்தில் என்ன ஒரு பரிசு’ என புகழ்ந்துள்ளார்.