வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:31 IST)

இறங்குவதற்கு முன்பே என்ன ஆட்டம் என முடிவு செய்யக் கூடாது- ராகுலுக்கு சேவாக் அட்வைஸ்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் டிவிட்டர் மூலமாக ஐபிஎல் தொடர் பற்றிய தன்னுடைய கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி இன்னும் கொஞ்சம் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தால் வெற்றிக்கணியை ருசித்திருக்கலாம். ஆனால் பவர் ப்ளே ஓவர்களில் மிகவும் மெதுவாக ஆடிய ராகுல் 22 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதுபற்றி பேசியுள்ள சேவாக் ‘ரோஹித் ஷர்மா போன்ற வீரர்கள் பந்துக்கு ஏற்ப ஷாட்களை விளையாடுவார்கள். ஆனால் ராகுல் போன்றவர்கள் இறங்குவதற்கு முன்பே இன்று டிபன்ஸ் ஆடப்போகிறோம் என்றோ அல்லது அட்டாக் செய்யப்போகிறோம் என்றோ முடிவெடுத்து இறங்குகின்றனர். இது மிகவும் தவறானது. ராகுல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடவேண்டும்’ என அட்வைஸ் கூறியுள்ளார்.