வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: வெள்ளி, 31 ஜூலை 2020 (20:34 IST)

எனக்கு ஒரு கதை ரெடி பண்ணுங்க…ரஜினி பேசிய ஆடியோ லீக்… சங்கடத்தில் இயக்குநர்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேசிய ஆடியோ லீக் ஆனது வருத்தம் அளிப்பதாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரிய சாமி தெரிவித்துள்ளார்.

கொரொனா ஊரடங்கு அமல்படுத்தும் முன் வெளியான படம் கண்ணும் கண்னும் கொள்ளையடித்தால். இப்படத்தில் துல்கர் சல்மான், ரீதுவர்மா, உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்தத் திரைப்படம் மக்களிடம் நல்லா வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், இயக்குநர் தேசிங்கு பெரிய சாமியை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினார். அதேசமயம் நீண்ட நாள்கள் கழித்து படம் பார்த்ததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

பின்னர் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் கசிந்தது. அந்த ஆடியோவில் தனக்கும் ஒரு  கதை தயார் செய்யும் படி கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.