இந்தியாவுக்காக 20 ஆண்டுகள் விளையாடியது மிகச்சிறந்த கவுரவம்: பிரிவு உபச்சார விழாவில் சானியா உருக்கம்..!
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமீபத்தில் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பிரிவு உபசார விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட சானியா மிர்சா இருபது ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய கௌரவம் என உருக்கமாக தெரிவித்தார்.
36 வயதான சானியா மிர்சா கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக டென்னிஸ் விளையாடி வருகிறார் என்பதும் அவர் பல பட்டங்களை வென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரிவு உபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் அவர் பேசிய போது 2002 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டு பதக்கம் வென்றது எனது மனதில் இன்னும் பசுமரத்தாணி போல் உள்ளது என்றும் 20 ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாடியது மிகச்சிறந்த கௌரவம் என்றும் நான் நினைத்ததை விட அதிகமாக சாதித்து விட்டேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் எனது கடைசி போட்டியை ரசிகர்கள் முன்னிலை உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடி வந்தது பரவசம் அளிக்கிறது என்றும் இதை விட சிறந்த வழியனுப்பு விழாவை நான் எதிர்பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். சானியா மிர்சாவின் சொந்த ஊரான தெலுங்கானா மாநில தலைநகரில் கண்காட்சி டென்னிஸ் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்பதும் இதில் அவர் கலந்து கொண்டு உருக்கமாக பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Edited by Siva