திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (11:00 IST)

அரசியலில் இருந்து திடீரென ஓய்வு பெற்ற முன்னால் முதலமைச்சர்.. தொண்டர்கள் அதிர்ச்சி..!

yediyurappa
அரசியலிலிருந்து திடீரென முன்னாள் முதலமைச்சர் ஒருவர் ஓய்வு பெற்றுள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து அக்கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னாள் கர்நாடக மாநில முதலமைச்சர் பாஜக பிரமுகருமான எடியூரப்பா கடந்த பல ஆண்டுகளாக கர்நாடகா அரசியலில் இருந்து வருகிறார் என்பது தெரிந்தது. கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்தபோது பல அதிரடி அறிவிப்புகள் வெளியானது என்பதும் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது திடீரென அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளதோடு பேரவைகள் தனது இறுதி உரையை நிகழ்த்தினார். 80 வயதாகும் கடந்த 1983 ஆம் ஆண்டு சட்டசபைக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார் என்பதும் அவர் கர்நாடக மாநிலத்தில் நான்கு முறை முதலமைச்சராக இருந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தேர்தல் அரசியல் இருந்து ஓய்வு பெற்றாலும் அரசியல் தலைவர்களுக்கு ஆலோசனை கூறுவேன் என்றும் அரசியலை கூர்ந்து கவனித்து வருவேன் என்றும் பாஜக மூத்த தலைவர் இடையூறு பா தெரிவித்துள்ளார். 
 
அவரது இந்த அறிவிப்பால் பாஜக தொண்டர்கள் அதிர்ச்சடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran