திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 12 ஏப்ரல் 2017 (05:34 IST)

தோனியை அவமதித்த புனே அணி படுதோல்வி! இனியாவது திருந்துமா?

'தல' தோனி இருந்தும் அவரை கேப்டனாக நியமனம் செய்யாமல் ரகானாவை கேப்டனாக நியமனம் செய்து அவமதித்த புனே அணிக்கு நேற்று படுதோல்வி தண்டனையாக கிடைத்தது.





நேற்று புனே அணி சொந்த மைதானத்தில் டெல்லியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. சாம்சன் அபாரமாக விளையாடி சதமடித்தார்

இந்த நிலையில் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய புனே அணி வெறும் 108 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து பரிதாபமாக 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

உலகமே புகழும் தோனியை அந்த அணியின் உரிமையாளர் அவமதித்ததோடு, டுவிட்டரில் கிண்டலடித்து வரும் நிலையில், புனே அணிக்கு கிடைத்த இந்த தோல்வி சரியான தண்டனை என்று தோனி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.