விராட் கோலிக்கு சச்சின் வாழ்த்து....

sachin koli
Last Updated: புதன், 24 அக்டோபர் 2018 (20:53 IST)
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் என அழைக்கப்டும் விராட் கோலி இன்று தனது ஒருநாள்போட்டியில் பத்தாயிரம் ரன்கள் கடந்தார்.இதற்கு சச்சின் டெண்டுல்க தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆடிய இந்திய அனியின் கேப்டன் விராட் கோலி தலைமை பதவியை ஏற்றுக்கொண்டு விளையாட்டிலும் சிறப்பாக ஜொலித்துவருகிறார்.
 
இந்நிலையில் இன்று ஒருநாள் போட்டியில் அதிவேகமாக பத்தாயிரம் ரன்கள் கடந்தார்.
இதற்கு சச்சிம் கூறியுள்ளதாவது:
 
’உங்களுடைய தீவிரமான மற்றும் உறுதியான விளையாட்டு எனக்கு வியப்பளிக்கிறது கோலி. ஒருநாள் போட்டியில் பத்தாயிரம் ரன்கள் எடுத்ததற்கு என வாழ்த்துக்கள். இந்த ரன் மழை மேலும்  தொடர்க.’  இவ்வாறு அவர் தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :