1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (19:39 IST)

19 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி!

ராஜஸ்தான் அணி பெங்களூர் அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

 
ஐபிஎல்2018 தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் - பெங்களூர் ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. 
 
20ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் 92 குவித்து கடைசி வரை களத்தில் நின்றார். இதையடுத்து 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி. அதிரடியாக விளையாடிய கோலி அரைசதம் விளாசினார்.