பட்டையை கிளப்பும் ரோஹித் சர்மா: இத்தனை சதமா?

rohit sharma
Last Modified செவ்வாய், 2 ஜூலை 2019 (17:51 IST)
இந்த உலக கோப்பை ஆட்டத்தில் ரசிகர்களின் விருப்ப நாயகனாக ரோஹித் சர்மாதான் இருப்பார். ஓவொரு மேட்சிலும் இந்தியா வெற்றிபெறுமா இல்லையா என்பதை விட ரோஹித் சர்மா இதில் அரை சதமடிப்பாரா? சதமடிப்பாரா? என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

ஒரு அணி பேட்டிங் செய்யும்போது அவர்கள் பலமே தொடக்க ஆட்டக்காரர்கள்தான். இதுபோன்ற 50 ஓவர் போட்டிகளில் முதல் 20 ஓவர்களுக்கு ரன்களை அதிகம் பெற்றாலே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அதிகப்படுத்தப்படும். ரோஹித் சர்மா இந்த உலக கோப்பையில் அதை மிக நன்றாகவே செய்துள்ளார்.

முதல் முதலிம் தென் ஆப்பிரிக்காவோடு விளையாடும்போதே தனது வலிமையை நிரூபித்தார் ரோஹித் சர்மா. முதல் ஆட்டத்திலேயே ஒரு சதத்தை எடுத்து வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு அரைசதத்தை வீழ்த்தினார். இந்த உலக கோப்பையில் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இந்தியாவிடம் மட்டும்தான் தோற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துடன் விளையாடிய ஆட்டத்தில் வெற்றி இங்கிலாந்துக்கு கிடைத்தாலும், அந்த கடினமான பந்து வீச்சிலும் சதத்தை வீழ்த்தி சாதனை படைத்தார் ரோஹித் சர்மா. இந்நிலையில் வங்கதேசத்துடன் நடந்து கொண்டிருக்கும் போட்டியில் தற்போது மீண்டும் ஒரு சதமடித்து சாதனை படைத்துள்ளார் ரோஹித் சர்மா.இதில் மேலும் படிக்கவும் :