செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2016 (06:11 IST)

ரியோ ஒலிம்பிக் : முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா

பிரேசிலில் நடைபெறும் ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
 

 
பிரேசில் ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டி நேற்று அதிகாலை கோலாகலமாக துவங்கியது. ஒலிம்பிக் போட்டியில், இந்தியா சார்பில் 128 வீரர்கள் 34 பிரிவுகளில் பங்கேற்பதற்ககாக, கடந்த 26ம் தேதி பிரேசில் புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
நேற்று நடந்த முதல் நாள் போட்டியில், இந்திய ஹாக்கி அணியும், அயர்லாந்து ஹாக்கி அணயும் மோதின.
 
பரபரப்புக்கும் விறுவிறுப்பக்கும் பஞ்சமில்லாத இப்போட்டியில், இந்திய ஹாக்கி அணி 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியி்ல், ரூப்பேந்திர பால் சிங்கின் இரண்டு கோல்கள், இந்திய அணியில் வெற்றிக்கு துணையாக இருந்தது.
 
இந்தியா வருகின்ற 8ஆம் தேதி ஜெர்மனியையும், 9ஆம் தேதி அர்ஜென்டினாவையும், 11ஆம் தேதி நெதர்லாந்து அணியையும், 12ஆம் தேதி கனடாவையும் எதிர்கொள்கிறது.