ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து தோனி சாதனை

VM|
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
 
சிட்னியில் சனிக்கிழமை நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக  முதல் ஒரு நாள் போட்டியில் தோனி இச்சாதனையை புரிந்தார்.
 
சச்சின் டெண்டுல்கர், செளரவ் கங்குலி, ராகுல் திராவிட், விராட் கோலி ஆகியோருக்கு அடுத்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-ஆவது இந்திய வீரர் தோனி ஆவார்.
 
கடந்த 2004 டிசம்பர் மாதம் ஒரு நாள் ஆட்டத்தில் அறிமுகமான தோனி, 16 சர்வதேச சதங்கள் அடித்துள்ளார். மேலும் விக்கெட் கீப்பராக 800 பேரை அவுட் செய்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :