வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாதனை படைத்தார் ரஃபேல் நடால்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாதனை படைத்தார் ரஃபேல் நடால்
கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வந்த நிலையில் இந்த தொடரில் ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார் 
 
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கால் வலியால் அவதிப்பட்ட போதிலும் அதனை அடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போதிலும் அதிலிருந்து மீண்டு வந்து ஆஸ்திரேலிய ஓபன் தொடரை ரபேல் நடால் வென்று சாதனை படைத்துள்ளார் 
 
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் வீரரை 2-6, 6-7, 6- 4. 6- 4, 7-5 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
 
களிமண் தரை ராஜா என புகழப்படும் ரபேல் நடால் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் 21 பட்டங்கள் இதுவரை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரஃபேல் நடால் சாம்பியன் பட்டம் பெற்ற இடத்தை அவருக்கு உலகம் முழுவதும் டென்னிஸ் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்