புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 7 அக்டோபர் 2019 (10:19 IST)

உடைந்த ஸ்டெம்ப் ...’ஷமியின் ஸ்ட்ரெந்துக்கு பிரியாணி தான் காரணம்' : கலாய்த்த ரோஹித் சர்மா !

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்று வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் பந்துவீச்சாளர் ஷமி.  இந்நிலையில் ஷமியின் வெற்றிக்கு அவர் சாப்பிடும் பிரியாணி தான் காரணம் என ரோஹித் சர்மா நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நேற்று வெற்றி பெற்றது.இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் எதுவும் ஷமி வீழ்த்தவில்லை. ஆனால் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 
 
மேலும், இரண்டு இன்னிங்ஸிலும் ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.அதனால் ரோஹித்துக்கு ஆட்டநாயகன் விருது வழங்கபட்டது. பின்னர் செய்தியாளர் சந்திப்பின்போது, ஷமியின் பந்துவிச்சை பற்றிக் குறிப்பிட்டு கூறியதாவது :  ’ஷமி பிரியாணி சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பது தெரியும்’  என்றார்.
இந்நிலையில் ஷமி நேற்று வேகமாகப்  பந்துவீசும்போது, ஸ்டெம்ப் உடைந்தது குறித்த போட்டோவை இந்திய கிரிக்கெட் வாரியம்  (பிபிசிஐ ) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது