1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 12 ஜூன் 2017 (23:08 IST)

சொதப்பிய இலங்கை ஃபீல்டர்கள். அதிர்ஷ்டத்தில் அரையிறுதிக்கு சென்ற பாகிஸ்தான்

ஐசிசி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இன்றைய முக்கிய ஆட்டத்தில் இலங்கை அணி வீரர்களின் சொதப்பலான ஃபீல்டிங் காரணமாக பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.



 


இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்ததால் இலங்கை அணி பேட்டிங் செய்தது. இலங்கை அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 236 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த இலக்கை மிக எளிதில் பாகிஸ்தான் எட்டிவிடும் என்று நினைத்த போதிலும் பாகிஸ்தான் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழ்ந்ததால் போட்டி கடுமையாக மாறியது. ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 162 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்த நிலையில் சர்பிராஸ் அஹமதி மற்றும் மொகம்மது அமிர் நிலைத்து நின்று வெற்றியை தேடித்தந்தனர். இறுதியில் பாகிஸ்தான் 44.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 237 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியுடன் அரையிறுதியில் மோதவுள்ளது.