1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 25 ஜனவரி 2017 (12:32 IST)

பத்ம விருதுகளுக்காக தோனி, சிந்து, கோபிச்சந்த் தேர்வு!!

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்து மற்றும் அவருடைய பயிற்சியாளர் கோபிச்சந்த், ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


 
 
ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்தவர்களுக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி மத்திய கவுரவப்படுத்தி வருகிறது. 
 
இதற்காக கடந்த ஆண்டுக்கான விருது பெயர் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டன. அதில் பி.வி.சிந்து, பயிற்சியாளர் கோபிச்சந்த், தோனி ஆகியோருக்கு பத்ம விருதுகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. 
 
நாளை நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில் பத்ம விருதுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த மாதிரியான பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.