புதன், 27 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (11:04 IST)

ஐபிஎல் போட்டி: புதிய யோசனையை கூறிய ராஜஸ்தான் ராயல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு மார்ச் 29ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அதற்கு மறுநாளே ஐபிஎல் போட்டி நடத்துவது என்பது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது. அப்படியே நடத்த முயற்சி செய்தாலும் வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது
 
இந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி ரஞ்சித் பர்தாகுர் என்பவர் ஒரு புதிய யோசனையை கொடுத்துள்ளார். இதன்படி இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இந்திய வீரர்களை மட்டுமே வைத்து ஐபிஎல் போட்டிகளை நடத்தலாம் என்றும், அவ்வாறு நடத்தினால் அது உண்மையான இந்தியன் பிரிமியர் லீக் தொடராக இருக்கும் என்றும் கூறியுள்ளார்
 
இருப்பினும் இதுகுறித்த முடிவை பிசிசிஐ தான் எடுக்க வேண்டும் என்றும் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு ஒரு தேதியை முடிவு செய்து அதில் இந்திய வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஐபிஎல் போட்டியை நடத்தலாம் என்று அவர் கூறியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ பரிசீலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்